தூத்துக்குடி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விளாத்திகுளம் பணிமனை தொமுச செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாரிமுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உடன் தொமுச முன்னாள் செயலாளர் சுப்பையா, தலைவர் சந்திரசேகர், பொருளாளர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துராஜ், கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் பிரசாத் மற்றும் உறுப்பினர்கள் கனகரத்தினராஜ், மாரியப்பன், குருசாமி, இளையபெருமாள், செல்வகிருஷ்ணன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட் ஆகியோர் உடனிருந்தனர்.

