தூத்துக்குடி மாநகராட்சி – 8வது வார்டுக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் தனது சொந்த செலவில் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் பவானி மார்ஷல், வட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், வட்டச் பிரதிநிதிகள் அமாலுதின், பாஸ்கா், ஆறுமுகம், மார்ஷல், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி , அல்பட் உள்பட பலா் உடனிருந்தனர்.

