தூத்துக்குடி
பொது மக்கள் மற்றும் மருத்துவ துறையின் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க உறுப்பு தான விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சிவகுமார், சீ சைடு ரோட்டரி சங்க தலைவர் கண்ணன் ராஜகோபால் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் விளாத்திகுளம் முத்து நகர் பிரிவு தலைவர் மருத்துவர் ராஜவேல் முருகன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். வ.உ.சி கல்லூரி நுழைவாயிலில் இருந்து வ.உ.சி வணிக சாலை வழியாக ஆரம்பமாகி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்ளக பகுதிக்குள் முடிந்தது.
பின்னர் உறுப்பு தானம் பற்றிய அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது, பேரணியின் முடிவில் இந்திய மருத்துவ சங்கம் விளாத்திகுளம் முத்துநகர் பிரிவு தலைவர் மருத்துவர் ராஜவேல் முருகன், துணைத் தலைவர் மருத்துவர் சரவணன், சீ சைட் ரோட்டரி சங்க தலைவர் கண்ணன் ராஜகோபால், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் சிவகுமார், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பத்மநாபன், துணை முதல்வர் மருத்துவர் கலைவாணி மற்றும் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி உறுப்பு தான முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.
பேரணியில் அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள், மருத்துவ மற்றும் செவிலிய மாணவர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள்,சீ சைடு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைத்து இந்த பேரணியில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒரு 4 வயது குழந்தை ஒரு உரையாற்றியதால், பங்கெடுத்தவர்கள் உடல் உறுப்பு தானத்தின் விழிப்புணர்வுக்கான தூதர்களாக மாறினர். இந்திய மருத்துவ சங்கம் விளாத்திகுளம் முத்து நகர் பிரிவு செயலர் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் நன்றி தெரிவித்தார்.

