தூத்துக்குடி, ஆக,23
தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது ஓவ்வொரு புதன்
கிழமையிலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்
அடிப்படையில் நேற்று பழைய நகராட்சி வளாகத்தில் உள்ள கிழக்கு மண்டல அலுலவகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கிழக்கு மண்டல உதவி ஆணையர் சொர்ணலதா வரவேற்புரையாற்றினார். இந்த
முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி
பேசுகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க இந்த முகாம் நடைபெறுகிறது.ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது பதிவுகளை பதிவு செய்து வருகின்றன. அதை முறையாக பார்வையிட்டு அந்த பணிகளும் ஓரு புறம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இந்த குறைதீர்க்கும் முகாமில் பெயர் மாற்றம் முகவாி மாற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் போன்றவைக்கு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.அதனடிப்படையில் இந்த முகாமில் கொடுக்கப்படும் ஓவ்வொரு மனுக்களையும் முறையாக பதிவு செய்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாநகராட்சி நிா்வாகம் பொறுப்பேற்ற பின் பல்வேறு பணிகளை முறையாக மேற்கொண்டு வருகிறோம்.
30 நாட்களுக்குள் கொடுக்கும் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் அந்த மனுக்களுக்கு தீர்வு குறித்து சம்பந்தபட்டவர்களுக்கு கடிதம் அனுப்பபடுகிறது.
தூத்துக்குடியில் பிரதான சாலைகள் அனைத்தும் முழுமையாக சீரமைக்கப்பட்டு பல்வேறு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டிருந்த பழைய கட்டிடங்களை முறைப்படுத்தியும் புதிதாக கட்டுவதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. இந்த கிழக்கு பகுதியில் தான் வியாபார பெருங்குடி மக்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில் பல பணிகளையும் உடனுக்குடன் செய்து வருகிறோம்.
மழை புயல் உள்ளிட்ட காலக்கடங்களில் மாநகராட்சி வளர்ச்சிக்கு குறிப்பாக
மாசு இல்லாத மாநகரை உருவாக்கும் வகையில் எல்லா துறை அதிகாாிகளும் முழுமையாக ஓத்துழைத்ததின் காரணமாக தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு சிறந்த இரண்டாவது மாநகராட்சி என தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சாிடம் பாிசு பெற்றுள்ளோம் இதற்கு முழுமையாக துணையாக நின்ற கனிமொழி எம்.பி அமைச்சா்கள் கீதாஜீவன் நேரு, பத்திாிகை துறையைசார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
எங்களுடைய பணி தொடர்ந்து மக்களுக்கான பணியாகவே இருக்கும் தொடர்ந்து எல்லா பகுதிகளுக்கும் குடிதண்ணீர் வழங்கப்படும் என்று பேசினார்.
39வது வார்டுக்குபட்பட்ட கனக
சபாபதி தெரு பகுதியில் உள்ள கால்வாய்களால் ஏற்படும் தீமைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று பிஜேபி யை சார்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் என்பவரது மனைவி முன்னாள் பாஜக வேட்பாளர் உஷாதேவி சண்முகசுந்தரம் மற்றும் சமூக ஆர்வலர் கணேசன், ஆகியோர் மேயரிடம் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாநகராட்சி மேயர்
கனக
சபாபதி தெரு பகுதியில் உள்ள கால்வாய்களால் ஏற்படும் தீமைகளை தீர்த்து வைக்க
நாளைய தினமே பணிகளை மேற்கொண்டு குறைகளுக்கு தீர்வு காண வேண்டுமென உத்தரவிட்டார்.
அதுபோல்
புல்தோட்டம் பகுதியில் உள்ள குறைபாடுகளை தீர்க்க கோாி அப்பகுதியை சேர்ந்த வடக்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், உள்பட 59 பேர் மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் கோாிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர் ராஜாராம், துணை பொறியாளர் முனீர் அகமது, நகர் நல அலுவலர் வினோத் ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், இளநிலை பொறியாளர் செல்வம், கவுன்சிலர்கள் ராமு அம்மாள், ரிக்டா, மும்தாஜ், பேபி ஏஞ்சலின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, முன்னாள் கவுன்சிலர் ஆனந்தராஜ், வட்ட செயலாளர்கள் கதிரேசன், பொன்ராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் (பொ) மனோஜ்குமாா், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர்மச்சாது, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் ஜோஸ்பா், பிரபாகா், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
ஓவ்வொரு வாரமும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் நேரடியாக மனுக்களை பொதுமக்கள் வழங்குவதன் மூலம் மேயர் உள்பட அரசுத்துறை அதிகாாிகள் உடனடியாக அதற்கு விளக்கம் கொடுத்து சில மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காண்பதால் மக்கள் பிரதிநிதிகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கோாிக்கை மனுவை திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் பிஜேபி என அனைத்து கட்சியினரும் கட்சிப் பாகுபாடு இன்றி வழங்கி வருகின்றனர். இதில் பலருக்கு உடனடியாக ஆணை வழங்கப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மாநகர மக்கள்
தூத்துக்குடி மாநகராட்சி
மேயருக்கும், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் வருகின்றனர்.

