தூத்துக்குடி
அதிமுக உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர் அடையாள அட்டையை அதிமுக தலைமை வழங்கி வருகிறது. அதன்படி 2024ம் ஆண்டிற்கான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உருவம் பதித்த புதிய அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தி அந்த அடையாள அட்டைகளை அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகத்தில் வைத்து வழங்கி அதிமுக உறுப்பினர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை துவங்கி வைத்தார்.
அதன்படி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட உறுப்பினர்களிடம் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கும் பணியின் முதற்கட்டமாக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வழங்கிய அட்டையை மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் சுதாகர் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் மனுவேல்ராஜ், எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் ரமேஷ்கிருஷ்ணன். மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் உள்பட பலர் உடனிருந்தனா்.

