தூத்துக்குடி
இந்திய திருநாட்டின் 78வது சுதந்திரதினவிழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி ஜெ எஸ் நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவிற்கு உதவி ஆணையர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.
மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி தேசியகொடியேற்றி பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பேசுகையில் தேசப்பற்றும் நாட்டுப்பற்றும் இருக்க வேண்டும். பள்ளி பருவம் தங்களது வாழ்வில் ஓழுக்கத்தை கடைபிடித்து பெற்றோர்கள் ஆசிாியர்கள் கூறும் கருத்துக்களை கேட்டறிந்து நல்லமுறையில் படித்து தங்களது எதிர்காலத்தை நிர்ணயம்செய்து கொள்ளும் இடமாக அமைத்துக்கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கல்வித்துறைக்கென்று பல ஆயிரம் கோடி ஓதுக்கப்பட்டு தமிழகத்தில் கல்வித்துறையில் பெரும் புட்சியை ஏற்படுத்தியுள்ளார். அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார். பின்னர் மகாத்மா காந்தி படத்திற்கு மலர் தூவி மாியாதைசெய்தார்.
விழாவில் கண்காணிப்பு அலுவலர் குருவையா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, கவுன்சிலர்கள் விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், சரவணக்குமார், ராஜேந்திரன், சுயம்பு, வெற்றிச்செல்வன், முத்துவேல், மாநகர திமுக மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், மாநகராட்சி தொடக்க பள்ளி தலைமை ஆசிாியர்சாந்தி சகுந்தலா, உதவி தலைமை ஆசிாியர் உமாசக்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

