தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கிராமசபை கூட்டம் ஜோதிபாஸ்நகர் கருமாாியம்மன் கோவில் அருகில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய கோாிக்கைகளை மனுக்களாக அளித்து சாலை கால்வாய் வீட்டுமணை பட்டா, 1000உதவித்தொகை குடிதண்ணீர் மாநகராட்சி பகுதியிலிருந்து உப்பாத்து ஓடையில் கழிவுநீா் கலப்பது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துக்களுக்கு பதிலளித்து ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசுகையில்
“தமிழக முதலமைச்சராக தளபதியார் பொறுப்பேற்ற பின், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி சட்டமன்ற உறுப்பினர் சண்முகயைா, ஆலோசனை படி இந்த ஊராட்சி பகுதிக்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும் பல பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 12லட்சம் லிட்டர் தண்ணீர் வந்ததை அதிகாாிகளிடம் பேசி 28 லட்சம் தண்ணீராக நமது ஊராட்சிக்கு உயர்த்தப்பட்டு வழங்கி வந்த நிலையில் அதில் ஏற்பட்டசில குளறுபடிகள் காரணமாக தண்ணீர் வரத்து அளவு ெகாஞ்சம் குறைந்துள்ளது. இரண்டு மாதம் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவது மட்டுமின்றி வீடுகளுக்கு நேரடியாக இணைப்புகள் கொடுக்கப்படும் இந்தபகுதியில் அங்கன்வாடி 30 நாட்களில் முடிவு பெறும் என்று அதிகாாிகள் கூறியுள்ளனர். இதே போல் நமது ஊராட்சி பகுதிக்கு இல்லாத உப்பாத்து ஓடை பகுதியில் மாநகராட்சி பகுதியிலிருந்து கால்வாய்கள் மூலம் கழிவுநீர் கொண்டு வந்து இணைப்பதின் மூலம் உப்பாற்று ஓடை முழுவதும் அக்கிரமித்துள்ள செடிகளை அகற்றி சீர் செய்ய வேண்டும். என்ற கோாிக்கையை ஏற்கனவே சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நோில் பார்வையிட்டு அதன் பணிகளை மழைக்காலங்களுக்குள் முடித்து கொடுப்பதாக கூறியுள்ளார்கள். அதே போல் விடுபட்ட 1000 உதவிதொகை வராதவர்களுக்கும் அது உாிய நேரத்தில் வந்து சேர்வதற்கு வழிவகை செய்யப்பட்டு எல்லா வகையிலும் ஊராட்சிக்கு நன்மை கிடைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்கள் மனுக்கள் பாிசீலனை செய்து வழங்குவதாக கூறியுள்ளார்கள். புறக்காவல் நிலையம் அமைத்து தேவையற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் அதற்கான பணிகளும் முறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றார். உப்பாத்து ஓடையை மழைகாலத்திற்குள் முழுமையாக சீரமைத்து கழிவுநீா் செல்வதற்கு வழிவகை ஏற்படுத்த வேண்டும் பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முறையாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேற தீா்மானங்களை நிைறவேற்றப்பட்டன.
முன்னதாக வீட்டுமனை பட்டா கேட்டு கல்லூாி மாணவி சந்தியா கட்டபொம்மன் வேடமணிந்து ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாாிடம் கோாிக்கை மனு அளித்தார்.


கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி ஓன்றிய பணி மேற்பார்வையாளர் முத்துராமன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, திமுக ஓன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், வசந்தகுமாாி, ஓன்றிய கவுன்சிலர்கள் அந்தோணிதனுஷ்பாலன், தொம்மை சேவியார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜேசுராஜா, சக்திவேல், தங்கமாாிமுத்து, கிளைச்செயலாளர்கள் மாாியப்பன், வேல்ராஜ், சுகாதார ஆய்வாளர் வில்சன், கிராமநிர்வாக அலுவலர் அமலதாசன், மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க செயலாளர் பாலமுருகன். கால்நடை உதவி மருத்துவர் பிரமிளா, வேளாண்மை அலுவலர் சௌந்தர்யா, ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூாி உன்னத் பாரத் அபியான் ஓருங்கிணைப்பாளர் முனைவர் சண்முகபிாியா, சென்மோிஸ் கல்லூாி உதவி போராசிாியர்கள் டயனாலோபோ, பிேளாரா, சத்துணவு துறை ஊரக அலுவலர் பேச்சியம்மாள், ரேஷன் கடை பணியாளா்கள் பெருமாள், சந்தனராஜ், தனிப்பிாிவு ஏட்டு முருகேசன், சமூக ஆர்வலர் வக்கீல் மாடசாமி, திமுக சுற்றுச்சூழல் அணி ஓன்றிய அமைப்பாளர் ராஜேந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார்.

