தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் போக்சோ வழக்கு குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டு குற்ற சம்பவங்களை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் மாவட்ட காவல்துறைக்கு உதவியாக இருந்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் – I அரசு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் எல்லம்மாள் , தூத்துக்குடி சார்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் மாலாதேவி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மேற்படி அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆலோசகர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

