தூத்துக்குடி ஆக,14
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மினி உள்விளையாட்டு அரங்கத்தினை திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார் .
கட்டுமான பணிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், பொறியாளர் விஷ்ணு ஆகியோரிடம் கேட்டறிந்தார் ஆய்வின் போது எம்.எல்.ஏ. நேர்முக உதவியாளர் சந்திரபோஸ் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங். துணைத்தலைவர் சங்கர், மாவட்ட பொதுசெயலாளரும் சமூக சேவகருமான காங்கிரஸ் எடிசன் திருவைகுண்டம் வட்டார தலைவர் உ. நல்லக்கண்ணு, நகர காங்.தலைவர் கருப்பசாமி, மாவட்ட ஊடக பிரிவு ஜேம்ஸ், முத்துமணி, முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெயசீலன், திருவை. வட்டார செயலாளர் நிலமுடையான், பேட்மாநகரம் நகர கிராம கமிட்டி தலைவர் நவாஸ், மாவட்ட இளைஞர் காங். பொது செயலாளர் மகாராஜன், முன்னாள் நகர தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன் வெள்ளூர் கிராம கமிட்டி தலைவர் மகேஷ், செல்வம், நளராஜபுரம் பாஸ்கரன், பாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

