தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நடைபெற்று வரும் விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியில் முத்துநகர் ரோட்டரி சங்கத்தின் கிளை அமைப்பான இன்ட்ரக்ட் கிளப் துவக்க விழாவும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவும் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தலைவரும் திருமண்டல உப தலைவருமான தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஜெபம் செய்து விழாவை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் இன்ஸ்டீன் தலைமை வகித்து மாணவர்கள் ஆற்றவேண்டிய கடைமைகள் குறித்து அறிவுறுத்தினார். பள்ளி முதல்வர் ஜெகன்நாதன் வரவேற்புரை ஆற்றினார்.
இன்ட்ரக்ட் கிளப் புதிய தலைவர் திபிலஸ் ஆதன், செயலாளர் ஸ்ரீவின் ஜெய்சாந்த் அசரியா ஆகியோருக்கு ரோட்டரிகிளப் உதவி கவர்னர் கண்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முத்துநகர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் விக்னேஷ், செயலாளர் விக்டர் ஆகியோர் ரோட்டரிசங்கத்தின் செயல்பாடுகள் அதன் துணை அமைப்பான இன்ட்ரக்ட் கிளப் ஆகியவற்றின் மூலம் உறுப்பினர்கள் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து விளக்கவுரையாற்றினர். முத்துநகர் ரோட்டரிச ங்கத்தின் முன்னாள் தலைவர் முகமது இப்ராஹிம் ரோட்டரி சங்கம் எதற்காக தோற்றுவிக்கப்பட்டது உலகஅளவில் நடைபெற்று வரும் செயல்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் பள்ளி துணை முதல்வர் ஆட்லின் ெஜனி, துறைத் தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் இன்ட்ரக்ட் கிளப்பின் நிர்வாகிகள் ராஷ்மி, யஷ்வந்த் பிரபு அஜய் உட்பட பல்வேறு கமிட்டிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இன்ட்ரக்ட் கிளப்பின் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஞானசௌந்தர்யா மற்றும் முதல்வர் ஜெகன்நாதன் செய்திருந்தனர்.

