தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பொதுத்தேர்தல் 2021 திருச்சிராப்பள்ளி மாநகரில் சட்டவிரோதமான மற்றும் ஆவணங்களற்ற பணப் பரிவர்த்தனைகளை தடுக்கும் பொருட்டும், தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் நேற்று காலை முதல் இரவு முழுவதும் திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மையங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் திருச்சி மாநகர காவலர்கள் மற்றும் மத்திய காவல் படையினர் சேர்ந்து சோதனை நடத்தினர். வாகன சோதனை செய்யும் இடங்களை ஆய்வு செய்து வாகன சோதனையை தீவிரப்படுத்தும் படி அனைத்து காவலர்களுக்கும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷ்னர் உத்தரவிட்டார்.