காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் ரூபாய் 13 லட்சம் மதிப்புள்ள 3650 லிட்டர் சாராயம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்திறகு உட்பட்ட கொன்னகாவெளி பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 13 லட்சம் மதிப்புள்ள 3650 லிட்டர் சாராயமும் 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் காரைக்கால் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. போலீசாரும் பறக்கும் படை உதவியுடன் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் உள்ள கொன்ன காவெளியில் 3650 லிட்டர் சாராயம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை கோட்டுச்சேரி போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 13 லட்சம் இருக்குமென அவர்கள் தெரிவித்தனர்.


