தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கூட்டம் கூட்டரங்கில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில் “ திமுக தலைவரும் தமிழக முதலைமைச்சருமான ஸ்டாலின் ஆட்சியில் நம்முடைய ஊராட்சி பகுதியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி சண்முகையா எம்.எல்.ஏ ஆலோசனை படி ஊராட்சி பகுதிக்கு தேவையான கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தி முறையாக செய்துள்ளோம். மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. என்பதை உணா்ந்து அந்த பணிகளையும் முழுமையாக செய்து முடித்து திமுக ஆட்சிக்கும் தமிழக முதலமைச்சருக்கும் உறுதுணையாக எல்லோரும் இருந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.”
கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்செல்வி, உறுப்பினர்கள் மகேஸ்வாி, பாரதிராஜா, பெலிக்ஸ், பாலம்மாள், ேஜசுராஜா, சக்திவேல், உமாமகேஸ்வாி, தங்கபாண்டி, ஜீனத்பீவி, தங்கமாாிமுத்து, ராணி, வசந்தகுமாாி, பாண்டியம்மாள், கலந்து கொண்டனா். ஊராட்சி மன்ற செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

