தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலையில் மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு குறுக்குச்சாலை ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் தலைமை வகித்தார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ரமேஷ், ஒன்றியக் குழு துணை தலைவர் காசி விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மற்றும் வட்டாட்சியர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, கிரி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிைல வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலைஞர் கனவு இல்ல திட்ட 9 பயனாளிகளுக்கு பணி ஆணை, வீடு பராமாிப்பு வேலைக்கான உத்தரவுகளை வழங்கினார்.
முகாமில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, வடக்கு மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் இம்மானுவேல், இளைஞர் அணி துைண அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், ஓன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துக்குமார், சந்தனராஜ், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பாண்டியராஜன், முன்னாள் பஞ் தலைவர்சங்கர், தொகுதிதகவல் தொழில்நுட்ப அணி ஓருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

