தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பொதுமக்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்யும் வகையில் புதன்கிழமை தோறும் வாரம் ஒரு மண்டலத்தில் உள்ள பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் வகையில் மக்களின் குறைதீர்க்கும் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2 வது கட்டமாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் வடக்கு மண்டல அலுவலகத்தில்
இன்று காலை நடைபெற்றது. கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் நேற்று புதன்கிழமை நடைபெற இருந்த இந்த கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது.
ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 72 மனுக்கள் பெறப்பட்டன. இதில், அனைத்து மனுக்களுக்கு உடனடி தீர்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான ஆணைகளை விரைவில் வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி உதவி ப்பொறியாளர் சரவணன், வடக்கு மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) நரசிம்மன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி திமுக பிரதநிதி பிரபாகரன், ஜேஸ்பர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

