தூத்துக்குடி திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணை செயலாளர் ஜெபத்தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் மாடசாமி, செந்தூர்மணி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், கலை இலக்கிய அணி அமைப்பாளர் துறைமுகம் ராமசாமி, இலக்கிய அணி அமைப்பாளர் ரகுராமன், வழக்கறிஞர் அணி அமைப்பாளா் செல்வக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுரேஷ்காந்தி, சுப்பிரமணி, ராமசாமி, மாவட்ட அணி துணைச்செயலாளர்கள் ரெங்கசாமி, ஆறுமுகம், துணைச்செயலாளர் அந்தோணி தனுஷ்பாலன், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பொறுப்பாளர் பாாி, வட்டச்செயலாளர் ராஜன், மற்றும் கபடி கந்தன், கப்பிக்குளம் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

