காரைக்கால் மாவட்டம் நிரவி திரு-பட்டினம் தொகுதியில் இன்று சட்டமன்ற உறுப்பினர் திருமதி கீதா ஆனந்தன் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி 2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காரைக்கால் மாவட்டம் நிரவி – திரு-பட்டினம் தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமதி கீதா ஆனந்தன்.
தற்போது நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக கடந்த 4 ஆண்டுகளாக சமூக சேவை செய்துவந்த நாகதியாகராஜன் என்பவர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த கீதா ஆனந்தன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிலும் அவர் பெயர் இல்லாததால் இன்று அவர் சுயேட்சையாக போட்டியிட தேர்தல் நடத்தும் அதிகாரி ஆதர்ஷிடம் மனு தாக்கல் செய்தார்.


