தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் சுழற்சி முறையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது மட்டுமின்றி எதிர்வரும் மழைகாலங்களில் முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பல்ேவறு பகுதியில் மழைக்காலங்களில் தேங்குகின்ற மழை நீரை வெளியேற்றும் வகையில் வடிகால்களை தூர்வாருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்ெகாண்டும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மாநகராட்சி – 7வது வார்டுக்குட்பட்ட லூர்தம்மாள்புரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டார்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் எமல்டன், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

