காரைக்கால் மாவட்ட தேர்தல் துறை மற்றும் ஸ்வீப் இணைந்து இன்று (18.03.2021) காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் சங்கல்பத்ரா என்னும் வாக்களிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா மற்றும் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திருமதி நிகாரிகா பட் ஆகியோர் மாணவர்களிடம் சங்கல்பத்ரா என்னும் வாக்காளர் உறுதிமொழி படிவத்தை அளித்து வாக்களிப்பு உறுதிமொழி ஏற்க வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி அர்ஜுன் சர்மா சங்கல்பத்ராவின் முக்கிய அம்சங்கள் குறித்து பேசுகையில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சகோதர சகோதரிகளிடம் சென்று தவறாமல் அந்த படிவத்தை அளித்து தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்றும், 100 சதவிகிதம் வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்றும் தனது பெற்றோரிடம் உறுதிமொழி பெற்று அந்த படிவத்தில் கையொப்பம் வாங்கி திரும்பவும் வந்து அந்த பள்ளி ஆசிரியரிடம் அளிக்கவேண்டும், என்றார். மேலும் பேசிய ஆட்சியர் மாணவர்களாகிய நீங்கள் தவறாமல் உங்கள் பெற்றோரிடமும் சகோதர சகோதரிகளுடன் சென்று 100% வாக்கினை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஸ்வீப் ஒருங்கினைப்பு அதிகாரி முனைவர் திருமதி ஷெர்லி மற்றும் ஒருங்கிணைப்பாளர்ஞானமுருகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

