தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 26ம் தேதி கால்நட்டு விழாவுடன் கொடை விழா தொடங்கி இதனை முன்னிட்டு தொடர்ந்து 7 நாட்கள் தினமும் இரவு முனியசாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

8ம் திருவிழாவான கோவில் கொடைவிழாவையொட்டி சிறப்பு விருந்தினராக கோவிலுக்கு வருகை தந்து சாமி தாிசனம் செய்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பாிசு வழங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச்செயலாளர் சுரேஷ், வட்டப்பிரதிநிதிகள் சண்முகையா, மதியழகன், பாஸ்கா், தொழிலதிபா் விஜயராஜ், மற்றும் மணி, அல்பட், கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

