தூத்துக்குடி
சேலத்தில் நடைபெற்ற 2024-25ம் ஆண்டிற்கான மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டியைச் சேர்ந்த மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் தனது குழுவினருடன் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உடன் பயிற்சியாளர் கோவில்பட்டியைச் சேர்ந்த மங்கள்ராஜ் மற்றும் கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

