தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பாக கோபாலசமுத்திரம் புறக்காவல் நிலையம் அருகில் இன்று தேர்தலில் அனைவரும் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணியை திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன்கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வாக்களிப்பது இந்திய குடிமகன் அனைவரின் ஜனநாயக கடமை எனவும் நூறு சதவீதம் இத் தேர்தலில் அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும் என விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் வட்ட வழங்கல் அலுவலர் சீதாதேவி, முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், கிராம உதயம் இயக்குனர் சுந்தரேசன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

