தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை சாலையில் உள்ள நேரு பூங்காவில் கடலரசர் சி.ஜ.ஆர்.மச்சாது திருஉருவச் சிலை அமைக்கப்பட்டு இருந்து வருகிறது. அது சிலகாலங்களாக பராமாிப்பு இல்லாத நிலை இருப்பதால் அது முறையாக சீர் செய்து சமுதாய மக்களின் சாா்பிலும் பொதுநல அமைப்பை சேர்ந்தவர்களும் அவரது நினைவுகளை ேபாற்றும் வகையில் மாலை அணிவத்து மாியாதை செய்வதற்கு ஏற்றவாறு வழித்தடத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மேயா் ஜெகன் பொியசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அப்பூங்காவினை நோில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வரும் நாட்களில் வழித்தடங்கள் ஏற்படுத்தி தரப்படும் என்று மேயா் ஜெகன் பொியசாமி உறுதி அளித்துள்ளார்.
உடன் பரதர் நல சங்கத்தின் தலைவர் ரெனால்டு வில்லவராயர், பொருளாளர் காஸ்ட்ரோ, பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, உள்பட பலர் உடனிருந்தனர்.

