தூத்துக்குடி
கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.
விழாவில் பல்கலை கழகத்தின் தரவரிசையில் இடம் பெற்ற இளங்கலை வணிக நிர்வாகயியலில் ரூபி ஏஞ்சல்க்கும், வணிகவியல் விக்னேஷ்வரிக்கும், ஆங்கிலம் தீபக்கும், 2019-2022ல் உள்ள மாணவ மாணவியர்களுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலத்துறை மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையேற்று பட்டங்களை வழங்கி பேசுகையில் “ பள்ளி படிப்பு என்பது அது ஓரு காலக்கட்டம் அதை கடந்த வரும் போது கல்லூாி படிப்பு என்பது உங்களது எதிர்காலத்தை நீங்கள் முடிவு செய்யும் இடத்திற்கு வரும் காலம் உங்களது பெற்ேறார்கள் நீங்கள் நல்லநிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு இருக்கும் பல கஷ்டங்களையும் தாங்கி கொண்டு உங்களை படிக்க வைப்பதை உணர்ந்து படிக்கும் காலத்தில் எதிர்காலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவர், என பல உயர்பதவிகளுக்கு வரவேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து நீங்கள் முன்னேறுவதற்கு காரணமாக இருக்கும் ஆசிாியர்கள் போராசிாியர்கள் கூறும் நல்ல கருத்துக்களை எடுத்துக்கொண்டு தேர்ச்சியில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் கல்வியோடு சேர்த்து பொதுஅறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். போட்டி நிறைந்த உலகத்தில் நம்முடைய திறமைதான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தமிழக அரசும் கல்விக்கென்று பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அது மட்டுமின்றி தமிழக முதலமைச்சர் தளபதியார்க்கு எல்லா துறைகளுமே முக்கியம் என்று கருதுவார். அதே நேரத்தில் கல்விக்கும் மருத்துவத்திற்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து இரண்டும் எனக்கு இருகண்கள் என்று பேசுவார். படிக்கின்ற காலம் முதல் கல்லூாி படிப்பு முடிக்கும் வரை நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார்”.
விழாவில் கல்லூரி செயலாளர் ஜீவன் ஜேக்கப், நிர்வாக உறுப்பினர்கள் சுதன்கீலர், சுதாசுதன், மற்றும் டாக்டர் மகிழ்ஜான், உள்பட ஆசிாியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் இளங்குமரன் மற்றும் பேராசிரியர்கள் ெசய்திருந்தனர்.

