தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
அதன்படி மாநகராட்சிக்குட்பட்ட 5 வார்டுக்குட்பட்ட இந்திரா நகர் 3 தெருக்களில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 16.75 லட்சம் மதிப்பீல் கட்டப்பட்டு வரும் புதிய கால்வாய் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை அமைச்சர் கீதாஜீவன் கேட்ட போது புதிய கால்வாய் வசதி, அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து புதிய கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். பின்னர் 13வது வார்டு போல்பேட்டை மேற்கு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுநிதியிலிருந்து ரூ. 11.50 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைத்திடும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் கூறுகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டு ஓவ்வொரு பகுதிக்கும் தேவையான சாலைகள் கால்வாய்கள் மின்விளக்குகள் சீரான குடிநீா் போன்ற அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. விடுபட்ட சில பணிகளையும் அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், என்று உத்தரவாதம் அளித்து ஓப்பந்ததாரர்களிடம் நல்லமுறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகராட்சி வடக்கு மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாநகர சிறுபான்மை அணி அமைப்பளார் சாகுல்ஹமீது, மாநகர மகளிர் அணி துணை அமைப்பாளர் நாராயணவடிவு, கவுன்சிலர்கள் ஜாக்குலின் ஜெயா, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டசெயலாளர் அசோக்குமார், வட்டப்பிரதிநிதிகள் பால்துரை, பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

