தூத்துக்குடி
காமராஜ் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 41 வது வார்டு சார்பில் மேல சண்முகபுரம் பகுதியில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். வார்டு தலைவர்கள் வெள்ளைச்சாமி அண்ணாமலை சாமி ராம்குமார் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டு 25 பெண்களுக்கு சேலை 25 ஆண்களுக்கு வேஷ்டி 50 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாநில பொது குழு உறுப்பினர் சந்திரபோஸ், ஐ.என்.டி.யு.சி மாநில செயலாளர் ராஜ், மண்டல தலைவர் ராஜன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், ஊடக பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மாநகர் மாவட்டத் துணைத் தலைவர்கள் பிரபாகரன், சின்ன காளை, அருணாச்சலம், சாந்தி மேரி, ஜெயஜோதி, நெப்போலியன், மாவட்ட செயலாளர் நாராயணசாமி, ஜெயராஜ், குமார முருகேசன், மணி, வார்டு தலைவர்கள் முத்துவேல், தனுஷ், முத்துராஜ், கிருஷ்ணன், கணேசன், ரெனிஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

