தூத்துக்குடி முத்துநகர் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பாக காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவையொட்டி செல்வ விநாயகபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், கவுன்சிலர் தெய்வேந்திரன் தொழிலதிபர்கள் கனிராஜ், அன்னதுரை, கணேஷ்குமார், முருகன், அருண்ஜெயக்குமார், தினேஷ்குமார், கிறிஸ்டோபர், உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் பால்ராஜ், மற்றும் ராஜேந்திரகுமார் செய்திருந்தனர்.

