தூத்துக்குடி.
உலக புகழ் பெற்ற பனிமய மாதா கோவில் திருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி அடுத்த மாதம் 5ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இத்திருவிழாவை காண இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து எல்லா சமுதாயத்தினரும் கலந்து கொள்ளும் நிகழ்வாக இருந்து வருகிறது.
இந்நிலையில் அருகில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில், நடைபெற்ற பனிமய மாதா கோவில் திருவிழா பொருட்காட்சி கால்நட்டு விழாவை மாதாகோவில் பங்கு தந்தை ஸ்டார்வின் ஜெபம் செய்து, ஆசீர்வதித்து கால்நட்டி பொருட்காட்சிப் பணிகளை துவக்கி வைத்தார்.
பாதர் ஆரோக்கியசாமி, மாதா கோவில் பங்கு பேரவை துணைத்தலைவர் அண்டோ, செயலாளர் எட்வின்பாண்டியன், துணை செயலாளர் பெனட், பொருளாளர் சோரிஸ், பொருட்காட்சி தலைவர் டென்சிங், செயலாளர் ஏ.டி.எஸ்.அருள், பொருளாளர் நிர்மலா மற்றும் ஹெர்மன் கில்டு, முருக இசக்கி, சுரேஷ்குமார், கல்யாணசுந்தரம் மற்றும் பொருட்காட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

