தூத்துக்குடி.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை ஆர்.சி. மினி மஹாலில் மக்களுடன் முதல்வர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குமாரகிரி, குலையன்கரிசல், சேர்வைக்காரன்மடம், கூட்டுடன் காடு, முள்ளக்காடு ஆகிய 5 ஊராட்சிப் பகுதி மக்களுக்கு 20க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் முகாமிற்கு தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த முகாமில் குடிநீர், வீட்டு வரி, பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, திடக்கழிவு மேலாண்மை, பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் வேண்டி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெகா முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார்கள் பிரபாகர், ராஜலெட்சுமி, ஞான்ராஜ், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, மகளிர் திட்ட அலுவலர் மல்லிகா, வருவாய் ஆய்வாளர் செல்வக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஷ்கண்ணா, செல்வி, பேச்சியம்மாள், ஆனந்த், பரமேஸ்வரி, பிரேமலதா, பாத்திமாராணி, செந்தில்குமார் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முப்பிலியன், திமுக ஒன்றிய துணைச்செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், ஜெனிட்டா மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், ஒன்றிய தொழிலாளரணி மொபட்ராஜன், இளைஞரணி சண்முகநாராயணன், கூட்டுடன்காடு துணைச்செயலாளர் செல்வம், அந்தோணியார்புரம் சார்லஸ், கிளைச்செயலாளர்கள் சமையல் முருகன், ஞானவேல் ராஜா, ஒன்றிய வர்த்தக அணி பொன்செல்வம், சக்கம்மாள்புரம் சண்முகசுந்தரம், மாவட்ட அணி ஜெயராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ஞானசேகர், ஒன்றிய செயலாளர் ஜெபகனி, கப்பிக்குளம் பாபு உட்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மனு கொடுத்தவர்களில் 2 பேரின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

