தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பல பகுதிகளில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். பாதிப்புக்குள்ளான பயனாளிகளை தேர்வு செய்து தமிழக அரசு சார்பில் பாதிப்பிற்கேற்ப நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
அதேபோல், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி அதிகளவில் பாதிக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை சந்தித்தனர். மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கட்டமைப்புகளை இரவு-பகல் பாராமல் பணிகளை செய்து கொடுத்தனர்.
இந்நிலையில் டி.சவேரியார்புரத்தில் அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பலத்த சேதமடைந்த சாலையை 2023-2024ம் ஆண்டு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 49.12 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று, சீர்செய்யப்பட்ட சாலையை தூத்துக்குடி கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா பார்வையிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாரிடம் மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி பானு, உதவி பொறியாளர் ரவி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

