தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி டி.சவோியார் புரத்தில் உள்ள தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத்துறை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தி ஐ பவுன்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச கண் பாிசோதனை முகாமிற்கு மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிாியர் சிவகாமசெல்வி தலைமை வகித்தார்.
அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட கண்பாிசோதனை முகாமை தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தொடங்கி வைத்து பேசுகையில் திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைக்கிணங்க இந்த கண்பாிசோதனை முகாம் இந்த பகுதி மக்கள் பலனடைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு நடத்தப்படுகிறது. இதை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
முகாமில் தி ஐ பவுன்டேஷன் கண் மருத்துவமனை மேலாளா் சுப்பிரமணியன், டெக்னிஷியன் முத்துராமன், விழிஔி பாிசோதகர் இந்திரா, கவுன்சிலர் உமா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிாியர்கள் சுப்பிரமணியன், கிருஷ்ணமாச்சாாி, ,ஈஸ்வரன், ராமராஜன், கிருஷ்ணகுமார், மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

