ஞாயிறு 30, ஜூன் 2024
தூத்துக்குடியில் கத்தி முனையில் போட்டோகிராபரிடம் செல்போனை பறித்து சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 7வது தெரு மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பொய் சொல்லான் மகன் பாலமுருகன் (25), போட்டோகிராபராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு 11 மணியளவில் தனது வீட்டுக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரது வீட்டு அருகே 2 பைக்கில் வந்த இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துசென்று விட்டார்களாம்.
இதன் மதிப்பு ரூ.7000 ஆகும். இந்த சம்பவம் குறித்து தென் பாகம் காவல் நிலையத்தில் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் அந்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.
செல்போன் கொள்ளையர்களுக்கு போலீசார் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

