கோடை ஜீன் 20,
கொடைக்கானல் ஆர்.சி நகர மேல்நிலைப்பள்ளி தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி கற்றுக் கொடுக்கும் பள்ளிகளில் முதலிடமாக கொடைக்கானலில் சிறந்து விளங்குகிறது. 2023-24ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் 100சதவிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஹரிஹரன் என்ற மாணவன் 487/500 மதிப்பெண்கள் பெற்று கொடைக்கானல் தாலுகாவிலேயே முதலிடம் பெற்றுள்ளார். இதுபோல் ஏராளமான மாணவர்கள் கணிதத்தில் 100/100 மார்க் பெற்றுள்ளனர். இந்த பள்ளியின் தாளாளர் சிலுவை மைக்கேல் ராஜ் சிறந்த முயற்சியால் இங்கு பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று வருகிறார்கள். தலைமை ஆசிரியர் சாந்தா மேரி மற்றும் உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோரின் சீரிய முயற்சியால் இந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதுடன் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி விகிதமும் இந்த பள்ளியில் சிறந்து விளங்குகிறது.

இதனால் கொடைக்கானல் நகரத்தில் முதன்மையான பள்ளி என்ற பெயரை கொடைக்கானல் ஆர்.சி நகர பள்ளி பெற்று வருகிறது. இந்த சிறப்புமிக்க கொடைக்கானல் ஆர்.சி. நகர மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வறுமைகள் கல்விக்கு தடையாக இருக்க கூடாது என்ற எண்ணத்தில் மனித நேயத்தோடு தலைமை செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் சாமுராய், தி பப்ளிக் ரிப்போர்டர் புலனாய்வு இதழ் துணை ஆசிரியருமான கோடை வி. ஆனந்த் அவர்களின் சீரிய முயற்சியில் இப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான ஓராண்டுக்கான கல்வி உதவித்தொகையை பள்ளியின் தாளாளர் சிலுவை மைக்கேல் ராஜ் அவர்களிடம் கோடை ஆனந்த்; வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது தலைமை செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் லோகேஸ்வரன், யோகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தா மேரி சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். கொடைக்கானல் நகரின் முதன்மை பள்ளியாகவும் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் இந்த பள்ளிக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் உதவிட வேண்டும் என்ற எண்ணம் எங்களது பத்திரிகையாளர் சங்கத்திற்கு தோன்றியது. அதன்படி ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மாநில ஒருங்கிணைப்பாளர் கோடை வி. ஆனந்த் ஆகிய எனது ஏற்பாட்டில் எங்களது நிர்வாகிகள் கல்வி உதவித்தொகை வழங்கினோம் என்று ஆனந்த் தெரிவித்தார்.

