மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு கனிமொழி எம்பி மூலம் பல மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ஜமாபந்தியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோாிக்கை மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் மாவட்ட வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உஷாவிடம் அளித்துள்ள நான்கு கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சிலுவைப்பட்டிமெயின் ரோட்டில் 190/2 என்ற சர்வே எண்ணில் உள்ள காதி கிராப்ட் வாாியத்திற்கு சொந்தமான நிலத்தினை வருவாய்துறை வசம் ஓப்படைத்து அவ்விடத்தினை மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு இவ்வலுவலகத்திலிருந்து கடந்த 3 ஆண்டு காலமாக பலமுறை கோாிக்கை மனு அனுப்பப்பட்டு வருகிறது.
மேற்படி இடத்தினை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்ற பொதுமக்களின் அச்சத்தினை குறிப்பிட்டும் கடந்த ஓரு ஆண்டு காலமாக இவ்வலுவலக கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்க எவ்விதமான முயற்சியும் மேற்கொள்ளாமல் எங்களது அலுவலகம் மூலம் அனுப்பப்படும் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
ஆகவே மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதியான சிலுவைப்பட்டி மெயின்ரோட்டில் 190/2என்ற சர்வே எண்ணில் காதி கிராப்ட் வாாியத்திற்கு சொந்தமான நிலத்தினை வருவாய்த்துறை வசம் எடுத்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகத்திடம் ஓப்படைக்க நடவடிக்கை எடுக்கும் படியும், கடந்த மே 2023 அன்று மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சுமார் 2000க்கும் மேலான மனுக்கள் கனிமொழி எம்.பி அவர்களால் பெறப்பட்டு மனுக்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இலவச வீட்டுமனை பட்டா வழங்க மனுக்கள் பெறப்பட்டு ஓரு வருட காலத்திற்கு மேலாகியும் இன்று வரையிலும் மேற்படி ஊராட்சி பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவது குறித்து எந்த ஓரு தகவலும் வரப்பெறவில்லை. ஆகவே இவ்வலுவலகத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு அனுப்பபட்ட மனுக்களை பாீசிலனை செய்து இலவச வீட்டு மனை கிடைக்க வழி வகை செய்து நடவடிக்கை எடுக்குமாறும்
இன்று ஜமாபந்தியில் கொடுக்கப்பட்ட மனுவில் தெரிவித்தார். மேலும் இந்த மனுவில் கூறிய மற்றொரு கோரிக்கையான மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியின் முக்கியமான பிரதான சாலை பகுதிகளில் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம் பொதுமக்கள் நலன் கருதி
தாளமுத்துநகர் மெயின்சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்ய நடவடிக்கை எடுத்திடவும்
நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் அந்த மனுக்கள் மீது நோ ரெஸ்பான்ஸ் மேற்கண்ட கோரிக்கைகள்
மேலும் கால தாமதம் படுத்தாமல்ந டவடிக்கை எடுத்திடவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்று இவ்மனுவில் தொிவித்துள்ளார். திமுக கட்சி ஆளுகின்ற இந்த நேரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் பல்வேறு கோரிக்கைகளை அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் அந்த மனுக்கள் ஆண்டு கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக வும், கிராமசபை கூட்டம் மூலம் சுமார் 2000 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டு அதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக முதல்வரின் தங்கை கனிமொழி எம்பி இடம் கொடுத்த மனுவுக்கும் 1 ஆண்டுகள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என திமுக ஒன்றிய செயலாளர் மீண்டும் வேதனையுடன் கோரிக்கை மனு அளித்தது தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மாப்பிள்ளை யூரணி ஊராட்சி பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையைbதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணகுமார் ஜமாபந்தியில் அதிரடியாக கொடுத்த கோரிக்கை மனு திமுக வட்டாரங்கள் மட்டுமல்லாமல் மாற்றுக் கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஆளுங்கட்சியை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் தனது பஞ்சாயத்து வளர்ச்சி பணிக்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனுக்கள் அளித்தும் அந்த மனுக்கள் மீது நடவடிக்கைகள் என்பது
காலம் தாழ்ந்து வரும் பட்சத்தில்
பொதுமக்களின் கோரிக்கைக்கு
என்ன தீர்வு? என பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தி எழுந்து வருகிறது. இருப்பினும் இந்தப் பகுதியில் ஆளும் திமுக கட்சிக்கு நடந்து முடிந்த எம்பி தேர்தலில்
அதிக வாக்குகள்
இந்த பகுதி மக்கள் அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என கனிமொழி எம்பி, நேரடியாக அதுவும் அடிக்கடி கண்காணித்தால் மட்டுமே மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற வாய்ப்புகள் ஏற்படும் என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
திமுக ஒன்றிய செயலாளர் வழங்கிய மேற்கண்ட கோரிக்கை மனு மீது துரித நடவடிக்கை எடுப்பார் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளன…
இந்த நான்கு கோரிக்கை மனு மீது என்ன நடவடிக்கை எடுக்க உள்ளார்கள் என மாப்பிள்ளையூரணி கிராம மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்…

