ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் அறிவிக்கப்பட்ட நாள்முதலே ஸ்ரீவைகுண்டம் தொகுதி பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தையும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
திமுக-காங்கிரஸ் மத சார்பற்றக் கூட்டணி அமைந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டால், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செல்வராஜ் அவர்களது மகன் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களுக்கு சீட் ஒதுக்க வேண்டுமென இங்குள்ள பொதுமக்களும் காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ் தலைமைக்கு தொடர்ந்து வேண்டுகோள் வைத்தனர். கடந்த 11 ஆண்டுகளாக தனது சொந்த செலவில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பல்வேறு ஏழை-எளிய மாணவ-மாணவியர்களுக்கு பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கு பெரிதும் உதவி புரிந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தனது சொந்த செலவில் இந்த தொகுதி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து திறம்பட செயல்படுத்தினார். மக்கள் பிரதிநிதியாக இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக இருந்து கொண்டு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு இவரது தந்தை வழியில் இவர் செய்த பணிகள் அனைத்தும் அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டப்படுகிறது. இந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் இந்த தொகுதியில் வளர்ச்சி தமிழகத்திலேயே ஒரு முதன்மை தொகுதியாக விளங்கும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அனைத்து சமுதாய மக்களையும் தனது அன்பால் அரவணைத்து வரும் ஊர்வசி அமிர்தராஜ் வெளிநாட்டில் பயின்றவர் ஆவார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தனது தந்தை செல்வராஜ் அவர்கள் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை இந்த தொகுதியில் திறம்பட செய்தார். அதனை தொடரும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் இந்த தொகுதியில் நடைபெறும் எனவும், குறிப்பாக, விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் விவசாயிகளின் நலனில் தனி அக்கறை செலுத்தி அதற்கு திட்டம் வகுக்கப்படும் எனவும், இத்தொகுதியில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு கமிஷன், கரப்ஷன் இல்லாமல் 100 சதவீதம் பணிகள் துரிதப்படும் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் திட்டவட்டமாக கூறப்படுகிறது.
உற்சாக வரவேற்பு:
வைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிவிக்கப்பட்ட பின்பு இன்று வருகை தந்த ஊர்வசி அமிர்தராஜுக்கு வாகைக்குளம் விமானநிலையத்தில் வைத்து காங்கிரஸ், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி செல்வராஜின் மகனும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஊர்வசி அமிர்தராஜ் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் கட்சி வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலைவர் அவர் சென்னை குயின்ஸ் லேண்டில் உள்ள அவரது தந்தையும் முன்னாள் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ வுமான ஊர்வசி செல்வராஜ் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சிலி செலுத்தினார். பின்னர் விமானம் மூலம் வாகைக்குளம் வந்தடைந்தார்.
அவருக்கு காங்கிரஸ், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து முக்காணி சென்று முக்காணி ரவுண்டானாவில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் சென்ற இடமெல்லாமல் மக்கள் வெள்ளம் போல் வருகை தந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். வழிநெடுகிலும் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, ஏரல் தாசன், சிவத்தையாபுரம் சொரிமுத்து பிரதாபன், சாத்தான்குளம் லூர்துமணி, பார்த்தசாரதி, சக்திவேல் முருகன், மாவட்ட பொது செயலாளர் சிவகளை பிச்சையா, முன்னாள் மாவட்ட ஒபிசி தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன்,

ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் தி.மு.க மாவட்ட வர்த்தக அணி தலைவர் சுந்தரராஜன், ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு பி.ஜி.ரவி, மேற்கு கொம்பையா, தி.மு.க மாவட்ட விவசாயி அணி துணை தலைவர் ராயப்பன், நட்டாத்தி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பண்டாரம், தி.மு.க பாலமுருகன், கிறிஸ்டோபர், சாயர்புரம் நகர தி.மு.க செயலாளர் அறவாழி, இளைஞரணி செயலாளர் கண்ணன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் துரை, துணை தலைவர் சங்கர், நகர காங்கிரஸ் தலைவர்கள் சாத்தான்குளம் வேணுகோபால், சாயர்புரம் ஜேக்கப், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சுற்றுப்பயணம் முழுவிபரம்:
நாளை 18.03.2021 அன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாலும், அன்றைய தினம் தேர்தல் சுற்றுப்பயணம் முழுஎழுச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18/03/2021 காலை 9 மணிக்கு திருவைகுண்டம், கருங்குளம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஊழியர் கூட்டம் ரங்கநாத பெருமாள் திருமண மஹாலில் நடைபெறுகிறது
மதியம் 1 மணி அளவில் திருவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வேட்புமனு தாக்கல் செய்கிறார் அவரைத் தொடர்ந்து மாலை 3 மணி அளவில் ஆழ்வார் கற்குளம் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் கொங்கராயகுறிச்சி காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். ஆறாம்பண்ணை பள்ளிவாசல் அருகில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார் மாலை 4.30 மணி அளவில் செய்துங்கநல்லூர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார் அதன் பிறகு கருங்குளம் வட்டார தேர்தல் பணி அலுவலகம் திறப்பு விழா நடைபெறுகிறது
மாலை
5 மணிக்கு புளியங்குளம் அம்பேத்கார் மற்றும் இமானுவேல் சேகரனார் ஆகியோர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் அதனைத் தொடர்ந்து கால்வாய் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்
வல்லகுளம் தேவர் படத்திற்கு மரியாதை செலுத்துகிறார் கிளாக்குளம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் மாலை 6 மணிக்கு தெற்கு காரசேரி தேவர் சிலை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் அரசகுளம் பகுதியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் இரவு 7.15 மணிக்கு சேரகுளம் கிருஷ்ணர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்குகிறார் அதனைத் தொடர்ந்து 7.30 மணிக்கு ராமானுஜம் புதூர் கிருஷ்ணன் சிலைக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் மாலை அணிவித்தார் மேற்கண்ட நிகழ்ச்சிகள்18/03/2021 தேர்தல் சுற்றுப்பயணம் விபரம் ஆகும் மேற்கண்ட தகவலை தேர்தல் பணிக்குழு திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸார் வெளியிட்டார்கள்.

2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் தமிழக அளவில் பார்க்கும்போது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் திருவிழா போல் விழாக்கோலம் பூண்டுள்ளது. காங்கிரஸ்காரர்கள், திமுகவினர்கள் மற்றும் மதசார்பற்ற கூட்டணியினர் ஒற்றுமையாக இணைந்து இரவு-பகல் என்று பாராமல் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து வருகின்றனர். திமுக-காங்கிரஸ் கூட்டணியினரின் அதிரடி செயல்பாடுகளை கண்ட பிற கட்;சியினர் கலக்கத்தில் காணப்படுகின்றனர்.
நாளை வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பின்னர் தான் தேர்தல் வியூகமே ஆரம்பம் என காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் சூரசமாக கூறிவருகிறார். வேட்பாளர் வரவேற்பு மற்றும் வேட்புமனுதாக்கல் போன்ற நிகழ்ச்சிக்கு இந்த தொகுதி மக்கள் இவ்வளவு எழுச்சியுடன் காணப்பட்டு வரும் நிலையில் கண்டிப்பாக தேர்தல் களம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
செய்தி தொகுப்பு: கே.எஸ்.முருகன்

