தூத்துக்குடி
தமிழகம் புதுச்சோியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து வெற்றி சான்றிதழை சென்னை மொினாகடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் வைத்து மலர் தூவி வணங்கினார்.
அப்போது வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பொியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், தெற்கு மாவட்ட திமுகஇளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மற்றும் கருணா, உள்பட பலா் உடனிருந்தனர்.
பின்னா் கனிமொழி எம்.பி தனது தாயார் ராஜாத்தியம்மாளிடம் வெற்றி பெற்ற சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

