தூத்துக்குடி
கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகில் தெற்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் துரைசிங் ஏற்பாட்டில் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து மோர், சர்பத், பழரசம், ரோஸ்மில்க், எலுமிச்சை ஜூஸ், தா்பூசணி ஜூஸ், உள்ளிட்ட குளிர்பானங்கள், மற்றும் தர்பூசணி பழம், பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட எம்.ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவாபாண்டியன். முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் ரத்தினம், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குநர் பாலசுப்பிரமணியன், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், அருண்குமார், மில்லை ராஜா, அந்தோணிராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் சகாயராஜ், ஜெயக்குமார், போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த டெரன்ஸ், ராஜேந்திரன், பேச்சிமுத்து, சண்முகராஜ், முன்னாள் வட்டச்செயலாளர்கள் கருப்பசாமி, கெய்னஸ், அசோகன், வட்டப்பிரதிநிதி ஐயப்பன், வக்கீல்கள் மந்திரமூா்த்தி, ஆறுமுகநயினார். மற்றும் மாாியப்பன், காசி, உள்பட பலர் கலந்து கொண்டனா்.

