தூத்துக்குடி
கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திரேஸ்புரம் பகுதி லூர்தம்மாள்புரத்தில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திறந்து வைத்து மோர், சர்பத், கம்பங்கூல், இளநீர், எலுமிச்சை ஜூஸ், ரஸ்னா, உள்ளிட்ட குளிர்பானங்கள், மற்றும் தர்பூசணி பழம், வாழைப்பழம், செவ்வாழை, அண்ணாசிபழம், பலாப்பழம், போன்ற பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் கூறுகையில் தண்ணீர் பந்தல் திறப்பது பொிய விஷயம் அல்ல கோடை காலம் முடியும் வரை பொதுமக்களின் நலன் கருதி குளிர்ந்த நீர் குளிர்பானங்கள் வழங்கி தினசாி அதை முறையாக பராமாிக்க வேண்டும் கடமைக்கு பணியாற்றாமல் கடமை உணா்வோடு பணியாற்ற வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளரும் மாநகராட்சி மண்டலத் தலைவருமான நிர்மல்ராஜ், கவுன்சிலர் ஜெயசீலி, வட்டச்செயலாளர்கள் கருப்பசாமி, தினகரன், ரவிசந்திரன், சுரேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ் மணி, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், மீனவரணி துணை அமைப்பாளர் நேவிஸ், பகுதி துணைச் செயலாளர் சோலையப்பன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் எமல்டன், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், கிளைமண்ட், தெய்வேந்திரன், அருண், முன்னாள் கவுன்சிலர் அமாலுதீன், நிர்வாகிகள் அலெக்ஸ், சம்சுதீன், ராஜா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, அல்பட், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் திரேஸ்புரம் பகுதி பொறுப்பாளர் மீராசா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

