தூத்துக்குடி
கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் ஜோயல் ஆகியோர் வழிகாட்டுதலின் படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலுவைப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை தெற்கு மாவட்ட திமுக இளஞைர் அணி துணை அமைப்பாளரும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட செயலாளருமான வக்கீல் பால்துரை திறந்து வைத்து மோர், சர்பத், பழரசம், ரோஸ்மில்க், இளநீர், எலுமிச்சை ஜூஸ், ரஸ்னா, உள்ளிட்ட குளிர்பானங்கள், மற்றும் தர்பூசணி பழம், வாழைப்பழம், செவ்வாழை, அண்ணாசிபழம், போன்ற பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஓன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஓன்றிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் சிலுவைப்பட்டி பாாி, மற்றும் சிவக்குமார், செந்தில், கிங்ஸ்டன், யோகராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

