தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட டேவிஸ்புரம் முத்துமாாியம்மன்கோவில் உச்சிமகாளியம்மன், காளியம்மன் பேச்சியம்மன், கருப்பசாமி, முனியசாமி, இசக்கியம்மன், பைரவர், ஆகிய பாிவார மூா்த்திகளுக்கு கொடைவிழாவையொட்டி கடந்த 23ம் தேதி கால்நட்டு விழா நடைபெற்று தினசரி பூஜைகளுடன் 8ம் நாள் மதிய கொடை நடைபெற்று பொதுமக்கள் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார் தொடங்கி வைத்து உணவருந்தினார்.
விழாவில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, தொழிலதிபர் யோகராஜ், கோவில் தர்மகர்த்தா மாாியப்பன், செயலாளர் முக்கான்டி, பொருளாளர் முனியசாமி, துணைத்தலைவர் கருப்பசாமி, துணைச்செயலாளர் பாலமுருகன், கோவில் பூசாாி சாஸ்தா, திமுக இளைஞர் அணி கௌதம், உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

