தூத்துக்குடி
தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தி 3 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார் தலைமையில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் கனிமொழி எம்.பி. நிறைவேற்றிய திட்டப்பணிகள் குறித்த துண்டு பிரசுரங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று தீவிரமாக வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 12ம் தேதி தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரலாறு காணாத வரவேற்பு கொடுக்க முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் கிழக்கு ஒன்றிய இந்தியா கூட்டணி தலைமை தேர்தல் காரியாலய அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சவேரியார் புரம் பகுதியில் கிழக்கு ஒன்றிய தேர்தல் காரியாலய அலுவலகத்தில் கிளைச் செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு சிறப்பு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமை தாங்கினார்.
இதில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார் முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தூர் மணி அரசு வழக்கறிஞர் பூங்குமார், தேர்தல் பொறுப்பாளர் சுதா ஆனந்தன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன் பாண்டி, மகளிர் தொண்டரணி ஒன்றிய அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, ஒன்றிய கவுன்சிலர் சேவியர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின்,
இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பால்துரை, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பொறுப்பாளர் சிலுவைப் பட்டி பாரி, மாவட்ட பிரதிநிதிகள் சப்பானி முத்து, ராமலிங்கம், சிவக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர்கள் எஸ் ஆர் கணேசன், ராமச்சந்திரன், வசந்தகுமாரி, ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், மகளிர் அணி ஜெசிந்தா, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜீவா பாலமுருகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்க மாரிமுத்து, யூனியன் கவுன்சிலர் அந்தோணி தனுஸ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஜேசுராஜா, தங்கப்பாண்டி, சக்திவேல் சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், இளைஞரணி கௌதம், ஒன்றிய இளைஞரணி அவைத்தலைவர் ஜோசியர் முருகன் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரன், மற்றும் கழக நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர், ஒன்றிய மகளிரணி, இளைஞரணி மற்றும் கூட்டணிக்கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

