• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 12 ம் தேதி தூத்துக்குடி வருகை : வரலாறு காணாத சிறப்பு வரவேற்பு கொடுக்க திமுக கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் சண்முகையா எம்எல்ஏ அதிரடி முடிவு!!

policeseithitv by policeseithitv
April 11, 2024
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வருகையின் போது வரலாறு காணாத வரவேற்பு அளிக்க – சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற திமுக கிழக்கு ஒன்றிய கூட்டத்தில் முடிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி,
ஏப்,11.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 12 ம் தேதி தூத்துக்குடியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகை தருகிறார். அவருக்கு வரலாறு காணாத சிறப்பு வரவேற்பு கொடுக்க வேண்டுமென திமுக கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் சண்முகையா
எம்எல்ஏ அதிரடியாக தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். அவர் தமிழகத்திலேயே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்ற எம்பி வேட்பாளர்
என்ற பெயரை
பெற வேண்டும் என்று தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக தலைமை கழகம்
தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி என்று அறிவித்த உடனேயே நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தி
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார் தலைமையில் பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், ஆகியோருக்கு தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருவது மட்டுமல்லாமல் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் கனிமொழி எம்.பி.இந்த தொகுதியில் நிறைவேற்றிய திட்டப்பணிகள்
அரசின் மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பயன்பாட்டிற்கான திட்டங்கள் குறித்து
துண்டு பிரசுரங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்வதும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு
இணைந்து தீவிரமாக வாக்கு சேகரிப்பு போன்ற பணிகளில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமார் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நாளை 12ம் தேதி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடியில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரலாறு காணாத சிறப்பு வரவேற்பு கொடுக்க நிர்வாகிகளோடு முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் கிழக்கு ஒன்றிய இந்தியா கூட்டணி தலைமை தேர்தல் காரியாலய அலுவலகத்தில்இந்த கூட்டம் நடைபெற்றது மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சவேரியார்புரம் பகுதியில் கிழக்கு ஒன்றிய தலைமை தேர்தல் காரியாலய அலுவலகத்தில் வைத்து கிளை கழக செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு சிறப்பு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமை தாங்கினார்.
இதில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார், முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சண்முகையா எம்எல்ஏ பேசியதாவது:
தூத்துக்குடிக்கு 12 ம் தேதி வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரலாறு காணாத சிறப்பு வரவேற்பு கொடுக்க வேண்டும் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூ ரணி ஊராட்சி பகுதியில் உள்ள டேவிஸ் புரம் சந்தன மாரியம்மன் கோவில் அருகே
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் அந்த இடத்திற்கு லட்சக்கணக்கான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் வருகை தந்து வரலாறு காணாத வரவேற்பு கொடுக்க வேண்டும், மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள 41 வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளன ஒரு பூத்துக்கு ஒன்பது பூத்கமிட்டி உறுப்பினர்கள்
நியமிக்கப்பட்டுள்ளார்கள் சுமார் 900 வாக்காளர்கள் கொண்ட ஒரு பூத் பகுதியிலுள்ள வாக்காளர்களை சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் மாப்பிள்ளையூரணி பகுதியில் மட்டும் சுமார் 30,000 வாக்குகளுக்கு மேல் கனிமொழி கருணாநிதி அவர்களின் வெற்றிக்கு எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்துவரும் பாரதிய ஜனதா கட்சியினர் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதை எடுத்துக் கூறும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
இப் பகுதியில் உள்ள மக்களுக்கு வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும். மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் அதனைப் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி பெற்ற வேட்பாளர்
என்ற பெருமையை கனிமொழி கருணாநிதி பெற வேண்டும்
அதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பல்வேறு வகையில் தேர்தல் வியூகங்கள் வகுத்துள்ளார்.
பூத் கமிட்டி நிர்வாகிகள் எந்த நேரத்திலும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக என்னையும் கிழக்கு ஒன்றிய
திமுக செயலாளரும் செயல்வீரருமான பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் அவர்களையும்
எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளுங்கள்
வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் வரை இரவு பகல் என்று பாராமல் நமக்குள்ள அனைத்து வேலைகளையும் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு
தீவிர தேர்தல் களப்பணியில்
இறங்கி அமோக வாக்கு வித்தியாசத்தில்
கனிமொழி கருணாநிதியை வெற்றி பெற செய்ய வேண்டும் என இந்த தருணத்தில் சபதம் ஏற்போம் என்று பேசினார்


இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தூர் மணி அரசு வழக்கறிஞர் பூங்குமார், தேர்தல் பொறுப்பாளர் சுதா ஆனந்தன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன் பாண்டி, மகளிர் தொண்டரணி ஒன்றிய அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, ஒன்றிய கவுன்சிலர் சேவியர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின்,
இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பால்துரை, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பொறுப்பாளர் சிலுவைப்பட்டி பாரி, மாவட்ட பிரதிநிதிகள் சப்பானி முத்து, ராமலிங்கம், சிவக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர்கள் எஸ் ஆர் கணேசன், ராமச்சந்திரன், வசந்தகுமாரி, ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், மகளிர் அணி ஜெசிந்தா, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜீவா பாலமுருகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்க மாரிமுத்து, யூனியன் கவுன்சிலர் அந்தோணி தனுஸ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஜேசுராஜா, தங்கப்பாண்டி, சக்திவேல் சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், இளைஞரணி கௌதம், ஒன்றிய இளைஞரணி அவைத்தலைவர் ஜோசியர் முருகன் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரன், மற்றும் கழக நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர், ஒன்றிய மகளிரணி, இளைஞரணி மற்றும் கூட்டணிக்கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வருகையின் போது வரலாறு காணாத வரவேற்பு அளிக்க – சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற திமுக கிழக்கு ஒன்றிய கூட்டத்தில் முடிவு

Next Post

அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தொிவித்து எஸ்டிபிஐ நிர்வாகி அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம் 

Next Post
அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தொிவித்து எஸ்டிபிஐ நிர்வாகி அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம் 

அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தொிவித்து எஸ்டிபிஐ நிர்வாகி அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம் 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In