தூத்துக்குடி
இந்தியா கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவா் முரளிதரன், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹா், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, சிபிஐ மாநகர செயலாளர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலையில் பொன்சுப்பையாநகர், கோவில்பிள்ளை நகர், அலங்காரதட்டு, லூர்தம்மாள்புரம், எஸ்எஸ் மாணிக்கபுரம், திரேஸ்புரம், திரவியபுரம், மட்டக்கடை குரூஸ்புரம் உள்பட 10 வார்டுகளில் திறந்த ஜீப்பில் சென்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்
உங்களுக்காக குரல் கொடுப்பதற்கு மீண்டும் கனிமொழி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் உதயசூாியன் சின்னத்தில் பெருவாாியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தேடி தரவேண்டும். 3 ஆண்டு திமுக ஆட்சி செய்த சாதனைகள் ஏராளம் அதிலும் குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் 10 மணிக்கெல்லாம் வியாபாாிகளை துன்புறுத்தும் அரசாக இருந்தது அந்த காலக்கட்டத்தில் சாத்தான் குளத்தில் தந்தை மகன் இருவரையும் காவல்துறையினர் சித்திரவதை செய்து கொன்றுவிட்டனர். ஆனால் இப்போது திமுக ஆட்சியில் வியாபாாிகள் வாழ்வாதாரம் உயர்வதற்கு சுதந்திரமாக கடையை திறந்து அடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மகளிா் உாிமைத்தொகை ஆயிரம், விடுபட்டவர்களுக்கு ஜீன் மாதம் முதல் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் இந்த துறையின் அமைச்சராக இருக்க கூடிய உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் உத்தரவு படி செய்து கொடுப்பார். இந்த பகுதியில் தேவையான கட்டமைப்பு பணிகளை குறிப்பாக சாலை கால்வாய் பூங்கா, புதிய மின்விளக்கு ஆரம்ப சுகாதார நிலையம் என அனைத்து தரப்பினருக்கும் உதவிகள் செய்துள்ளோம். அந்த உாிமையோடு வாக்கு கேட்க வந்துள்ளோம் ஆயிரம் உாிமைத்தொகை வழங்குவதை போல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ஓரு லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது நிச்சயம் நடக்கும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ெபட்ரோல் 75, டிசல் 65, கேஸ் 500, சுங்கவாி கட்டணம் நீக்கம் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும். அதே போல் தமிழகத்திற்கும் பல நன்மைகள் கிடைப்பதன் மூலம் எல்லா திட்டங்களும் நன்மைகளும் முறையாக உங்களை வந்து சேரும் என்று பேசினார்.
மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, நிக்கோலாஸ்மணி, மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், முருகஇசக்கி, டேனி, துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், மகேஸ்வரன்சிங், வினோத், பெல்லா, ஆர்தர் மச்சாது, தொழிற்சங்க செயலாளர் மாியதாஸ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், கவுன்சிலர்கள் ஜெயசீலி, மெட்டில்டா, பவாணி, வைதேகி, சுதா, எடிண்டா, ாிக்டா, வட்டச்செயலாளர்கள் தினகரன், ரவிசந்திரன், கருப்பசாமி, டென்சிங், முத்துராஜா, லியோஜான்சன், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், மற்றும் மணி, அல்பட், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜயராஜ், மைதீன், ஐசன்சில்வா, மதிமுக நிர்வாகிகள் சரவணபெருமாள், மகாராஜன், தொம்மை, முருகேசன், பொன்ராஜ், மக்கள்நீதிமய்யம் நிர்வாகிகள் அக்பா், சந்தனம், உள்பட இந்தியா கூட்டணியை சோ்ந்த பலர் கலந்து கொண்டனர்.

