தூத்துக்குடி, ஏப்ரல்,9
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இதனையடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோரின் அறிவுறுத்தலின்படி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூ ரணி பஞ்சாயத்து தலைவருமான
சரவணக்குமார்
தலைமையில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் ஆகியோர்
மாப்பிள்ளையூரணி ஜோதிபாசு நகரில் கனிமொழி கருணாநிதி சாதனைகளை துண்டு பிரசுரம் மூலம் வழங்கி ஜோதி பாசு நகரில் ஒவ்வொரு வீடாக சென்று பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்
தீவிரமாக வாக்கு சேகாித்தார்.

கனிமொழியாற்றிய பணிகளின் சாதனைகள், திமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி உதயசூாியன் சின்னத்திற்கு வாக்கு சேகாித்த
திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமாருக்கு அப்பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் தங்களது வாக்கு
உதய சூரியனுக்கு என்று சரவணக்குமாரிடம் பொதுமக்கள் உறுதி பட தெரிவித்தனர். இப்பகுதி மக்களுக்கு , கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம் எல் ஏ சண்முகையா,
ஆகியோரின் ஆணைக்கிணங்க பல்வேறு பணிகள் நடைபெற்று உள்ளது. கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்று மகுடம் சூட்டும் போது மேலும் இப்பகுதி பல்வேறு வளர்ச்சி அடையும் கனிமொழி கருணாநிதியிடம் இப்பகுதி வளர்ச்சிக்காக நாம் எப்போதும் அவரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என பொதுமக்களிடம் சரவணகுமார் தெரிவித்தார். இந்த தீவிர வாக்கு சேகரிப்பின் போது தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, கிழக்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் கணேசன், ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் மைக்கேல் ராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, திமுக கிளை செயலாளர் சந்திரசேகர், ராயப்பன், பாண்டி, இளைஞரணி கௌதம், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன்,
மாவட்ட மகளிர் அணி தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற ஓட்டப்பிடாரம் கிழக்கு பகுதி பொறுப்பாளர் சிலுவைப்பட்டி பாரி, உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

