தூத்துக்குடி.
நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாக கட்சி சார்பில் எஸ்.டி.ஆர் விஜயசீலன் போட்டியிடுகிறார்.
எஸ்.டி.ஆர் விஜயசீலனுக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்கு சேகரிக்க பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி 19வது வார்டுக்குட்பட்ட மகிழ்ச்சிபுரம் பகுதியில் பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர் பாலசேகர் தலைமையில் துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் மோடி அரசின் சாதனைகள் மற்றும் கொள்கைகள் குறித்த விளக்கங்கள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் பாஜக 12-வது கிளைத்தலைவர் செல்வகணேசன், 22-வது கிளைத்தலைவர் சுப்பையா, 232-வது கிளைத் தலைவர் மணிகண்டன், 237-வது பாலமுருகன், 145-வது கிளைத் தலைவர் பரமசிவன் உட்பட ஏராளமான பாஜக நிர்வாகிகள், பெண்கள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் துண்டு பிரசுரங்களை பெற்றுக்கொண்டனர்.

