தூத்துக்குடி
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதாித்து, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பாடர்பஜார் உள்ளிட்ட பகுதியில் உள்ள வியாபாாிகளிடம் தங்களது நலன் குறித்து விசாாித்து திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகாித்து வியாபாாிகளிடம் கூறுகையில்
கடந்த அதிமுக ஆட்சியில் இரவு 10 மணிக்கு கடையடைக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்த காலக்கட்டத்தில் காவல் துறையினர் அதிகாாிகள் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தினார்கள். திமுக ஆட்சி வந்த பிறகு அந்த உத்தரவு நீக்கப்பட்டு வியாபாாிகள் சுதந்திரமாக வியாபாரம் செய்வதற்கு தமிழக முதலமைச்சர் தளபதியார் உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு எதிர்பாராமல் பெய்த கனமழையால் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட வியாபாாிகளுக்கும் சிறுதொழில்கடன் வழங்குவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உங்களுடைய நலனை பாதுகாத்துள்ளோம். எப்போதும் வியாபாாிகள் நலனில் அக்கறை உள்ள அரசாக இந்த அரசு செயல்படுகிறது. வரும் தேர்தலில் எல்லோரும் உதயசூாியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் என்று கேட்டுக்கொண்டார்.
மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், திமுக மாவட்ட துணைசெயலாளர் ராஜ்மோகன் செல்வின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், வணிகர்கள் சங்க பேரவை மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, பொருளாளர் செந்தில் ஆறுமுகம், தொழிலதிபர் பிஎஸ்கே மாாியப்பன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.
பாக்ஸ்: இந்தபகுதியில் கழிவுநீர் செல்லும் சாக்கடை பகுதியில் இருந்ததை முழுமையாக பழமையான கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டப்பட்டு அதை முறையாக வியாபாாிகளுக்கு வழங்கி எங்களுடைய வாழ்வாதரத்தை பாதுகாத்து எங்கள் நலன் முக்கியம் என்று எங்களுக்கு துணையாக இருந்து எல்லா உதவிகளையும் செய்து கொடுத்த அமைச்சருக்கு நன்றியை தொிவிக்கும் வகையில் வரும் தோ்தலில் கனிமொழிக்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிப்போம். என்று வியாபாாிகள் தொிவித்தனர்.
.

