தூத்துக்குடி
பாரளுமன்ற தோ்தல் நடைபெறுவதை யொட்டி இந்தியா கூட்டணி சார்பில் வட்டக்கோவில் அருகில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தலைமை வகித்தார். பகுதி செயலாளர் ஜெயக்குமார், முன்னிலை வகித்தார். மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரனோ காலக்கட்டம் சிறிய பெட்டிகடை முதல் பொிய தொழிற்சாலை வரை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ துறையை முழுமையாக இயங்க செய்து வௌிமாநிலத்திலிருந்து ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டு பலரது உயிரையும் நாம் காப்பாற்றினோம். அப்போது முதற்கட்டமாக நாளாயிரம் பின்னர் பொங்கல் தொகுப்பு என பல வழங்கப்பட்டுள்ளது. இப்போது 1 கோடியே 17 லட்சம் பேருக்கு மகளிர் உாிமைத்தொகை பெருந்தன்மையுடன் முதலமைச்சர் வழங்கி வருகிறார். நான் முதல்வன் படிப்பு வகைக்கு ஆயிரம் உதவித்தொகை இப்படி பல சாதனைகளை செய்துள்ள இந்த ஆட்சியில் ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை இருந்து வருகிறது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் நடைபெறவில்லை. அதே போல் 10 ஆண்டு மோடி ஆட்சியிலும் தமிழகத்திற்கு எந்த நன்மையும்இல்லை. வௌ்ள காலத்தின் போது ஓரு ரூபாய் கூட வழங்கவில்லை. ஆனால் தமிழகத்திலிருந்து ஓன்றிய அரசு ஜிஎஸ்டி வசூல், ரயில் பயணம் மூலம் வசூல், விமானம் மூலம் வசூல், இவை எல்லாவற்றிலுமே தமிழக மக்களின் பணத்தில் வருமானம் வருகிறது. அதில் தமிழகத்திற்கு வழங்க கூடிய நிதியை கூட வழங்குவது இல்லை. குஜராத்திற்கு ஓரு நிதி தமிழகத்திற்கு ஓருநிதி, பாரபட்சத்துடன் செயல்படுகிறது, தூத்துக்குடியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதியின் மூலம் கடந்த ஆண்டு 900 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் இந்த மாநகரத்திற்கு வௌ்ள பாதிப்பு காலத்தில் எந்த நன்மையும் செய்ய வில்லை. தமிழக முதல்வர் பொறுப்பேற்றதும் மழை காலத்தின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டு எங்களுக்கு பல அறிவுரைகளை வழங்கியதின் போில் மழை காலங்களில் பக்கிள் கால்வாய்களை மட்டுமே நம்பி இருந்தநிலையில் இப்போது புதிதாக மழைநீர் வௌியேறுவதற்கு 9 கால்வாய் வழித்தடங்களை உருவாக்கி இருக்கிறோம். இருப்பினும் ஓராண்டு பெய்ய வேண்டிய மழை இரண்டு நாட்களில் பெய்த காரணத்தால் ஏற்பட்ட வௌ்ளம் 3 தினங்களில் மாநகர பகுதியில் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் எம்.பி உள்பட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முழுமையாக இருந்த பணியாற்றியதின் காரணமாக சராசாிநிலைக்கு வரப்பெற்றது. அதற்கடுத்தகட்டமாக எல்லா பகுதிகளுக்கும் ஆளும்கட்சி எதிர்கட்சி என்ற பாராபட்சம் இல்லாமல் முழுமையாக சாலை கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்லோரும் இந்தியாவில் சமமாக வாழ வேண்டிய இடத்தில் பிஜேபி அதில் பிாிவினையை உருவாக்கி வருகிறது. வட மாவட்டங்களில் இருப்பதை போன்ற நிலைகளை இங்கும் ஏற்படுத்த முயற்சியை மேற்கொள்கின்றன. இது பொியார், அண்ணா, கலைஞர், வழியில் தளபதியார் ஆளும் தமிழகத்தில் இடமில்லை எல்லோரையும் சமமாக மதிக்கும் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. இரண்டு டோல்கேட் பகுதியையும் அப்புறப்படுத்த வேண்டும். மீளவிட்டான் பகுதியில் உள்ள மேம்பாலம் பணி முறையாக நடைபெறாத காரணத்தால் விபத்துக்கள் மூலம் 36 பேர் உயிாிழந்துள்ளனர். இப்போது அந்த பணிகளை நாம் செய்துள்ளோம் முறையாக 300 கோடி செலவில் திருச்செந்தூர் கோவில் முழுமையாக கட்டமைப்பு பணிகளை மேற்கொண்ட திருப்பணி நடைபெறவுள்ளது. தூத்துக்குடி காரர்கள் பாசக்காரர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் 6 தொகுதிகளிலும் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனா். கடந்த தேர்தலில் கனிமொழி இந்த தொகுதியில் மட்டும் 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள். இந்த முறை அது ஓன்றரை லட்சமாக மாற வேண்டும். ஆறு தொகுதிக்கும் சேர்த்து 5லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற அறிவிப்போடு தூத்துக்குடி விழாவில் மோடி கனிமொழி பெயரை உச்சாிக்காத நிலையில் சென்ற அவருக்கு இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளில் கனிமொழி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். என்ற அறிவிப்பு வரும் பொழுது மோடி திரும்பி பார்க்கும் நிலை வரும் இந்தியாவில் உள்ள 117 கோடி ேபரையும் இந்தியா கூட்டணி இனி வழிநடத்தும் நிலை வரவுள்ளன. தூத்துக்குடி பகுதியில் நான்கு கேட்டுகள் இருந்தும் ஓரு இடத்தில் மட்டுமே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் பல நெருக்கடிகள் ஏற்படுகிறது. புதிதாக விஎம்எஸ் நகர் பகுதியில் ஓரு மேம்பாலம் அமையவுள்ளது. தமிழகத்தில் குழந்தைகள் முதல் 70 வயது முதியவர்கள் வரை எல்லா தரப்பினருமே இந்த ஆட்சியில் பயனடைந்துள்ளனர். புதிய தொழிற்சாலைகள் அமைய இருப்பதால் உள்ளுர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிமுக பாஜக கட்சிகளுக்கு வேட்பாளர்களை தேடி பிடித்து நிறுத்தும் நிலை உருவாகியுள்ளது. தமிழகம் புதுச்சோி உள்பட 40 தொகுதிகளையும் நாம் வெற்றி பெறுவது உறுதி இருப்பினும் இரவு பகல் பாராமல் அனைவரும் ஓற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று பேசினார். திமுக மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், சமத்துவ மக்கள்கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், உள்ளிட்டோர் திமுக ஆட்சி சாதனைகளையும் மோடி ஆட்சியின் வேதனைகளையும் வேட்பாளர்களின் தரம் குறித்து விளக்கவுரையாற்றினார்கள்.
கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், நாராயணன், செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, பகுதி பொருளாளர் உலகநாதன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், மாவட்ட அணி துணை அமைப்பாளர் ஜான்சன், மாநகர மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் பெல்லா, சண்முகவடிவு, இந்திரா, கவுன்சிலர்கள் ஜெயசீலி, நாகேஸ்வாி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், வைதேகி, தெய்வேந்திரன், மாநகர அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர்கள் தங்கராஜ், வினோத், வட்டச்செயலாளர்கள் சேகர், ரவீந்திரன், ராஜாமணி, சதீஷ்குமார், அசோக்குமார், சக்கரைசாமி, முனியசாமி, குட்டி, பகுதி பிரதிநிதி பேச்சிமுத்து, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், அருணகிாி, புஷ்பராஜ், பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் ரேவதி, சந்தனமாாி, மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, மற்றும் மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் சரவணபெருமாள், பாலசுப்பிரமணியன், இலக்கிய அணி துணை செயலாளர்கள் மகாராஜன், காங்கிரஸ் மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் மைதீன், நிர்வாகிகள் சின்னக்காளை, கோபால், சேகா், முத்துவிஜயா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

