தூத்துக்குடி
மார்ச் 13ம் தேதி ஆய்வக நுட்புனர்கள் தினம் மற்றும் பாராமெடிக்கல் லேப் கல்வியியல், வெல்பர் அசோசீயேசன் 25-வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மாநிலம் தழுவிய கிரிக்கெட் போட்டி, பேச்சு போட்டி, கவிதை போட்டி, ரிங் பால் போட்டி போன்றவை பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது.
இந்த போட்டியில் பங்கு பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் கே.கே பிரதர்ஸ் அணி, தூத்துக்குடி மாவட்டம் பியர்லெஸ் பைட்டர்ஸ் அணி மற்றும் ஆய்வக நுட்புனருக்கான பாராட்டு விழா தூத்துக்குடி தலைமையிடத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தேசியத் தலைவர் காளிதாசன் தலைமைதாங்கி சிறப்புரையாற்றி, போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட தலைவர் அபிராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்;. கன்னியாகுமரி மாவட்ட தலைவர் எட்வர்ட்சாம் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும், நிகழ்ச்சியில் மருத்துவ ஆய்வக மலரை தேசியத் தலைவர் காளிதாசன் வெளியிட்டார். புது உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை மாநில மகளிர் அணி அமைப்பாளர் கலா தொகுத்து வழங்கினார்;.
விழாவில் மாநில துணைச் செயலாளர் ஜெபசிங், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் பிரதீப், மாவட்டத் துணைத் தலைவர் சுப்பிரமணியன், பூராஜா, மூக்காண்டி பரலோகராஜ், கிறிஸ்துராஜ், கதிர், சாலமோன், எட்வர்ட் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வக நுட்புனர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயபால் நன்றியுரையாற்றினார்.

