தூத்துக்குடி
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான இந்தியா கூட்டணி சார்பில் எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார்.
எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கனிமொழி பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார்.
முன்னதாக, கலைஞர் கருணாநிதியின் படத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி எம்.பி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
விழாவில், துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள், ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், மாநகர துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், ரமேஷ், அந்தோணி ஸ்டாலின், சீனிவாசன், குபேர் இளம்பருதி, கவிதாதேவி, அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், அருணாதேவி, பெனில்டஸ், ஜோசப் அமல்ராஜ், பிரபு, ராமர், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிர்மல்ராஜ், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, அன்னலெட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், இ.ராஜா, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், மாலாதேவி, ஆனந்த கப்ரியேல் ராஜ், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், முருகஇசக்கி, ரூபஸ், கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், ராஜேந்திரன், அற்புதராஜ், குமரன், ரவி, செல்வலெட்சுமி, சீதாராமன், பெல்லா, மகேஸ்வரன்சிங், ஆர்தர் மச்சாது, சங்கரநாராயணன், பிரவின் குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், மாரிச்சாமி, சக்திவேல், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மகளிரணி தலைவி தங்கம், கவுன்சிலர்கள் ஜாக்குலின் ஜெயா, சரவணக்குமார், ஜெயசீலி, பேபி ஏஞ்சலின், ரிக்டா, ரெக்ஸ்லின், சுப்புலெட்சுமி, எடின்டா, தனலெட்சுமி, ஜான்சிராணி, நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், வட்ட செயலாளர்கள் பாலகுருசாமி, சிங்கராஜ், சுப்பையா, சேகர், கருப்பசாமி, முனியசாமி, மனோ, ராஜாமணி, ரவி இளங்கோ, சுரேஷ், செல்வராஜ், லியோ ஜான்சன், டென்சிங், கதிரேசன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தொமுச நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், கருப்பசாமி, பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் கருணா, மணி, பிரபாகர், அல்பட் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், நிர்வாகிகள் கோபால், சேகர், ராஜன், குமார முருகேசன், ஆரோக்கியம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளார் எடிசன், மதிமுக மாநகர செயலாளர் முருக பூபதி, இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள், நிர்வாகிகள் நக்கீரன், மகாராஜன், தமிழக வாழ்வுரிமைக்கட்சி மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி, சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹர், திராவிட தமிழர் கட்சி மாநில நிதிச் செயலாளர் சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் மாடசாமி, பொருளாளர் சுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா உள்பட இந்தியா கூட்டணிச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் நன்றியுரையாற்றினார்.

