தூத்துக்குடி
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
கூட்டணிக் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில இணைத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பர்ணபாஸ், வழக்கறிஞர்கள் வில்லின் பெலிக்ஸ், மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டேவிட் பிரபாகரன் வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில், நடைபெறயிருக்கின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடையச் செய்வதற்கு சிறப்பாக தேர்தல் பணியாற்றுவது, தேர்தல் பிரச்சாரம் வாக்குப் பதிவு மற்றும் வாக்குகள் எண்ணும் நேரங்களில் சட்ட ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக சட்டரீதியாக எதிர்கொள்ள உதவிட வேண்டும் என்றும், நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் தேர்தல் சம்பந்தமாக ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ள அனைத்து காவல்நிலையத்திற்கும் காங்கிரஸ் வழக்கறிஞர்களை பொறுப்பாளராக நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
வழக்கறிஞர்கள் கியூபர்ட், வில்சன் தேவராஜ், ஆல்டிரின் ஏர்மார்ஷல், பிரான்சிஸ் ஜுடு வினோத், ஞான நிர்மல், ஸ்டான்லி, ஜெயச்சந்திரன், ஜோசப் விக்டர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் வழக்கறிஞர் ராஜா நன்றியுரையாற்றினார்.

